ADDED : அக் 11, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவிகளுக்கான
எறிபந்து போட்டி
ஈரோடு, அக். 11-
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான மாவட்ட எறிபந்து போட்டி, ஈரோடு சி.எஸ்.ஐ., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
போட்டி, 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. 14 வயது பிரிவில் நம்பியூர் காமராஜ் மெட்ரிக் பள்ளி; 17 வயது பிரிவில் பெருந்துறை கொங்கு மெட்ரிக் பள்ளி; 19 வயது பிரிவில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி முதலிடத்தை
பிடித்தன.
இந்த மூன்று அணிகளும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன், வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கினார்.