ADDED : மார் 19, 2026 04:26 AM

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், சட்டசபை தேர்தலுக்-காக, 'வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை' என்ற வாக்-காளர்களுக்கான விழிப்
புணர்வு மாரத்தான் துவங்கியது.
கலெக்டர் கந்தசாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார். 'நல்-லாட்சிக்கான முதல்படி ஓட்டுப்பதிவு, நம் வாக்கு நம் நாட்டின் முன்னேற்றம், ஜனநாயக கடமை' என்பதை வலியுறுத்தும் பதா-கைகளை மாணவ, மாணவியர், அலுவலர்கள் ஏந்தி சென்றனர்.கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய மாரத்தான், சம்பத் நகர், அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா வழியாக விளை-யாட்டு மைதானம் அடைந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜ-கோபால், தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
* ஈரோடு, திண்டல் வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில் 'வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை' என்ற வாக்-காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடந்தது.
கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து, 18 வயது நிரம்பிய-வர்கள் கட்டாயமாக வாக்காளராக பதிவு செய்ய வேண்டும். சட்ட-சபை தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும், என வலியு-றுத்தி, உறுதிமொழி ஏற்றனர்.
விழிப்புணர்வுக்காக செல்பி பாயின்டில் போட்டோ எடுத்து கொண்டனர். ஈரோடு
ஆர்.டி.ஓ., சிந்துஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
