/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆய்வு
ADDED : ஜன 03, 2026 07:41 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிக்கான படிவம் பெறப்-பட்டு விசாரித்து, கடந்த டிச., 19 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், கடந்த, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்-போகாத, 44,600 வாக்காளர்களுக்கு மீண்டும் படிவம் வழங்கி, உரிய ஆவணங்கள் திரும்ப பெறும் பணி நடக்கிறது.
அதேநேரம், 240 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், அப்ப-டிவம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து, நேரில் விசாரித்து, தகுதியான நபர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து வருகின்-றனர்.
இதற்கான விசாரணை பணிகள் அந்தந்த பகுதி தேர்தல் பிரிவு அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி அலுவலகங்களிலும் நடக்கிறது. நேற்று வெள்ளோடு, ஈரோடு காந்திஜி சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் நடந்து வரும் விசாரணையை, கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.
உரிய ஆவணங்கள் வழங்கிய வாக்காளர்களை நேரில் விசாரித்து, உறுதி செய்து வாக்காளராக சேர்க்க வேண்டும்.
அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், தேர்தல் ஆணைய விதிகளின்படி, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி, தகுதியான வாக்காளர்கள் விடுபடாமல் சேர்க்க வேண்டும், என வலியுறுத்தினார்.

