ஓட்டுப்பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி துவக்கம்
ADDED : ஆக 05, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி சார்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் முதற்கட்ட பணியை, ஆணையர்
அர்பித் ஜெயின் நேற்று துவக்கி வைத்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த
அறையின் சீல் அகற்றப்பட்டது.
இதுகுறித்து ஆணையர் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
பெங்களூரில் இருந்து வரப்பெற்றுள்ளது. இதில், 2,080 கன்ட்ரோல்
யூனிட், 2,320 பேலட் யூனிட் என, 4,400 இயந்திரங்கள் உள்ளன. இதில்
முதற்கட்டமாக இயந்திரங்களில் பேட்டரி பொருத்தி செயல்திறன் ஆய்வு
செய்யப்படுகிறது. இன்று (நேற்று) துவங்கி நான்கு நாட்கள் இந்த பணி
மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு கூறினார்.
