/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணை கொலை செய்து எரித்த 'வி.ஆர்.எஸ்.,' போலீஸ்காரர் கைது
/
பெண்ணை கொலை செய்து எரித்த 'வி.ஆர்.எஸ்.,' போலீஸ்காரர் கைது
பெண்ணை கொலை செய்து எரித்த 'வி.ஆர்.எஸ்.,' போலீஸ்காரர் கைது
பெண்ணை கொலை செய்து எரித்த 'வி.ஆர்.எஸ்.,' போலீஸ்காரர் கைது
ADDED : டிச 10, 2025 10:58 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே வட்டமலைக்கரை அணை பகுதியில் கடந்த, 5ம் தேதி பெண் சடலம், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. வெள்ளகோவில் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்-தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சங்கரை, 56, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதான சங்கர், 1998ல் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஏலக்காய் வியா-பாரம் செய்ததுடன், தனியார்
நிறுவனங்களில் காவலாளியாக பணிபுரிந்தார். கொலையான பெண் பழனி பெரியகளயமுத்துாரை சேர்ந்த துரை மனைவி வடிவுக்கரசி, 45; தன்னிடம் நட்-பாக பழகிய
வடிவுக்கரசியிடம், அரசு வேலை வாங்கி தருவதாக சங்கர் தெரிவித்துள்ளார். இதை நம்பி தனக்கு தெரிந்தவர்களிடம் சிலரிடம் பணம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால்,
வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு சண்டை பிடித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, கோவிலுக்கு
செல்லலாம் என பைக்கில் அழைத்து, வட்டமலைகரை ஓடை அணை பகு-திக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு தலையில் கல்லை போட்டு கொன்று, தீ வைத்து
எரித்-துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். வெள்ள-கோவில் போலீசார் சங்கரை கைது செய்து, நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

