ADDED : செப் 06, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் முகாம் அலுவலகத்தில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் விழாவை, நேற்று கொண்டாடினர்.
அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி, அமைச்சர் மரியாதை செலுத்தினார். நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், தி.மு.க., சட்டத்துறை செயலர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.