/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்

ADDED : ஆக 21, 2025 02:09 AM
ஈரோடு, ஈரோடு, வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக முத்துக்குமார் (செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். செங்குந்தர் கல்விக் கழக தலைவர் சண்முகவடிவேல் ஆசியுடன், துணைத் தலைவர் மாசிலாமணி முன்னிலை வகிக்க, செயலாளர் சிவானந்தன்,
இணைச்செயலாளர் புஷ்பராஜ், தாளாளர் கணேசன் அவர்கள் வாழ்த்தி பேசினர். செங்குந்தர் நர்சரி பள்ளி தாளாளர் வேலு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர்.பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் சார்பாக அவரது மகன் யுவராஜ், பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழாவின் நிகழ்வாக, மாணவியரின் கலை நிகழ்ச்சி
கள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சி
யில் பங்கேற்ற மாணவியருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமையாசிரியை கவிதா வரவேற்றார். முதுகலை ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.