தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கை

சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கை

சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கை


ADDED : மே 12, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிஅத்தாணி வன எல்லை பகுதிக்கு உட்பட்ட குளத்துக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி கவுதம். இவரது விவசாய தோட்டத்தில், சிறுத்தை நடமாட்டம் நேற்று முன்தினம் இருப்பதாக அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இந்நிலையில் அண்ணாநகர், சஞ்சீவிராயன்கோவில் பகுதி, பொன்னாச்சியம்மன் கோவில் பகுதி, காக்காச்சிகுட்டை, உரம்புகிணறு, செம்புளிச்சாம்பாளையம், உரக்கோம்பை, அம்மா நகர் பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுடன் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினர்.

சிறுத்தையை பிடிக்க கூண்டு, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனத்துறையினரும் சிறப்பு ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us