தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாலாற்றை இரவில் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை

பாலாற்றை இரவில் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை

பாலாற்றை இரவில் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை


ADDED : செப் 19, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில், பாலாறு நீர்ப்பிடிப்பு

பகுதிகளான குன்றி, கடம்பூர், மாக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நான்கு நாட்களாக தொடர் மழை பெய்ததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் தமிழக எல்லை வனப்பகுதியில் உள்ள வேலம்பட்டி, குட்டையூர், மட்டி

மரத்தள்ளி மலை கிராம மக்கள், இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். நேற்று காலை வெள்ளத்தின் அளவு படிப்படியாக குறைந்தது.

இதனால் குட்டையூர் மற்றும் வேலம்பட்டியில் இருந்து, மாக்கம்

பாளையம் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் ஆற்றைக் கடந்து பள்ளிக்கு செல்ல நேரிட்டது. மக்களும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர். ஆற்றை நடந்து கடக்க முடியுமே தவிர, டூவீலரில் கடக்க முடியாத நிலையே உள்ளது.

எனவே மாலை, 6:00 மணிக்கு மேல், பாலாற்றை யாரும் கடக்க வேண்டாம் என, அந்தியூர் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான அண்ணாமடுவு, பள்ளிபாளையம், பட்லுார், சின்னத்தம்பி

பாளையம், மைக்கேல்பாளையம், சங்கராப்பாளையம், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை, 5:45 மணி முதல் 6:15 மணி வரை மிதமான மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us