ADDED : செப் 19, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
பவானி,:பவானி
நகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட வர்ணபுரத்தில் கால்நடை
மருத்துவமனை அருகே, ரேஷன் கடை அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக
கோரிக்கை வைத்திருந்தனர்
இந்நிலையில் திருப்பூர் எம்.பி., நிதியில்
இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதை எம்.பி., சுப்பராயன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்வில் கம்யூ., கட்சியினர் கலந்து கொண்டனர்.
