ADDED : செப் 19, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
பத்ரகாளியம்மன் கோவிலில், வெளிப்புறம் மற்றும் உள்பக்கம் மண்
தரையில் பேவர் பிளாக் அமைத்தல், திருமண நிகழ்வுக்கான உணவு கூடம்
அமைத்தல், கழிப்பறை, கிரானைட் தரைத்தளம் என பல்வேறு வளர்ச்சி
திட்டப்பணிகளை, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையை உபயதாரர்கள் மூலம் திரட்டவும்,
ஹிந்து சமய அறநிலையத்துறை வாயிலாகவும் பெறவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தியூர் எம்.எல்.ஏ.,
ஹரிபாஸ்கர், இது தொடர்பான பணிகளுக்காக கோவிலில் நேற்று ஆய்வு
மேற்கொண்டார்.
