/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணைகளில் உபரிநீர் திறக்க வாய்ப்பால் கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ADDED : அக் 21, 2025 01:46 AM
ஈரோடு, வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்ப்பதால், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவு நிலையை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து எந்நேரத்திலும், 10,000 கன அடி வரை உபரி நீர் திறக்கும் வாய்ப்புள்ளது. இதேபோல் மேட்டூர் அணையில் இருந்தும், 20,000 கன அடி வீதம் உபரி நீர் திறக்க முடிவு செய்துள்ளனர். இதனால் பவானி, காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு, வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு வருவாய் துறையினர் கூறியதாவது: காவிரி ஆற்றில் உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்படவுள்ளது. எனவே கரையோர பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கருங்கல்பாளையம் காவிரி கரையோரம், 12 வீடுகள் உள்ளன. இவர்கள் தங்குவதற்கு மாநகராட்சி துவக்கப்பள்ளி தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு கூறினர்.