/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நொய்யல் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
/
நொய்யல் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 18, 2024 03:01 AM
நொய்யல் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னிமலை, அக். 18--
சென்னிமலை அருகேயுள்ளது ஒரத்துப்பாளையம் அணைக்கு, ஒரு வாரத்துக்கு முன், 275 கன அடி நீர் வரத்தானது. அப்போது உப்புத்தன்மை 1,520 டி.டி.எஸ்.,சாக இருந்தது.
இந்நிலையில் நொய்யல் ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை, 745 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம், 16 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 513 கன அடி நீர் நொய்யல் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் உப்புத்தன்மை, 820 டி.டி,எஸ்.,சாக குறைந்திருந்தது. நொய்யல் ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-நிருபர் குழு-
அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பவானி நகர அ.தி.மு.க., சார்பில், அந்தியூர்- மேட்டூர் பிரிவில் நடந்த நிகழ்ச்சியில், நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவைத்தலைவர் ஜுகுனு பாலு, நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலாளர் மாதையன் உள்ளிட்டோர், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியம் கொண்டாடினர்.
* கோபி கச்சேரிமேட்டில் கட்சி கொடியை, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உட்பட பலர்
பங்கேற்றனர்.
* திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில், செயலாளர் ரவிச்சந்திரன், கிளை செயலாளர்கள் தலைமையில், 25க்கும் மேற்பட்ட இடங்களில், கட்சி கொடியேற்றி கொண்டாடினர். பேரவை செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க பிரிவு செயலாளர் சிவக்குமார், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். தாராபுரத்தில் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கொடியேற்றி கொண்டாடினர்.
* காங்கேயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன் தலைமையில், பஸ் ஸ்டாண்ட் முன் கட்சி கொடியேற்றினர். நகர நிர்வாகிகள், மக்கள் பலர் கலந்து கொண்டனர்.