/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு நகரில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
/
ஈரோடு நகரில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
ADDED : அக் 10, 2024 01:42 AM
ஈரோடு நகரில்
10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
ஈரோடு, அக். 10-
ஈரோடு மாநகரில், தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க, 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் விரைவில் அமைய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி, நகை, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வரும் நாட்களில் ஈரோடு மாநகருக்கு அதிகளவிலான மக்கள் நகர், கிராமப்புறங்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் வருவர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து குற்ற செயல் தடுப்பு, கூட்ட நெரிசலை ஒழுங்கு செய்தல், வாகன போக்குவரத்தை சீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ஜி.ஹெச், ப.செ.பார்க், மணிக்கூண்டு, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, கொங்காலம்மன் கோவில் பிரிவு முன்புறம், ஆர்.கே.வி.சாலை, காளை மாட்டு சிலை உள்ளிட்ட, 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கண்காணிக்க உள்ளோம். இதுதவிர பெருந்துறை, கோபி, சத்தி, பவானி சப்-டிவிசன் தலைமையக கடை வீதி பகுதியிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். விஜயதசமி பண்டிகைக்கு பின், கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி துவங்கும். இவ்வாறு கூறினர்.

