/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து நீர் வினியோகம்
/
கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து நீர் வினியோகம்
ADDED : செப் 30, 2024 06:52 AM
ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில், முறை வைத்து நீர் வினியோகம் செய்ய நீர்வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலில், 2024--25ம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு ஒற்றைப்படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான வாய்க்காலில் இரட்டைப்படை மதகுகளில், ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு ஆக., 15 முதல் டிச., 12 வரை, 120 நாட்களுக்கு அரசாணையின்படி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு பாசனப்பகுதியில் போதிய மழை பெய்யாததால், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் போதிய பாசன நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் முறை வைத்து நீர் வினியோகம் செய்ய நீர் வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாட்களில் முறை வைத்து நீர் வினியோகிக்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவ மழை கைகொடுக்கும் பட்சத்தில், முழுமையாக நீரை வினியோகம் செய்யவும், அதுவரை முறை வைத்து நீர் வினியோகிக்கவும் நீர் வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறுகையில்,''தண்ணீர் திருட்டை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கையும் கை கொடுக்க வேண்டும். பாசன சபையினர், விவசாயிகளிடம் நீர்வளத்துறையினர் பேசி வருகின்றனர்,'' என்றார்.

