/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு
ADDED : மே 22, 2025 01:54 AM
புன்செய்புளியம்பட்டி, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 2,346 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையில், 105 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்க முடியும். அணையின் மொத்த கொள்ளளவு, 32.8 டி.எம்.சி., அணையில் சேகரிக்கப்படும் தண்ணீரால், 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களாக, அணைக்கு நீர் வரத்து சரிந்தது.
இந்நிலையில், இரண்டு மூன்று நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 278 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 2,346 கன அடியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 69.57 அடியாகவும், நீர் இருப்பு, 10.7 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. குடிநீர் தேவைகளுக்காக, ஆற்றில், 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.