/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:57 AM
புன்செய்புளியம்பட்டி, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது.
அணையின் நீர் பிடிப்பு பகுதி
களான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து, 3,294 கன அடியாக இருந்தது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 96.25 அடி; நீர் இருப்பு, 25.8 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி, காளிங்கராயன் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 1,350 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீரும் என மொத்தம், 1,355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்
படுகிறது.