/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்படுகிறது'
/
'கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்படுகிறது'
'கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்படுகிறது'
'கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்படுகிறது'
ADDED : ஆக 22, 2024 03:42 AM
பெருந்துறை: ''கீழ்பவானி வாய்க்காலில், பாசனத்திற்கு இன்று (22ம் தேதி) காலை 6:00 மணி முதல் தண்ணீர் திறக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, 15ம் தேதி விவசாயித்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.19 மாலை 4:00 மணியளவில் நல்லாம்பட்டி கிராமம், சாராயக்கவுண்டர் காடு என்ற பகுதியில், வாய்க்கால் அடியில் குறுக்கே மழை நீர் செல்ல அமைக்கப்பட்ட வடிகால் குழாயில், சிறிய அளவில் நீர் கசிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகளை உடனே மேற்கொண்டனர். இந்த பணியை நேற்று மாலை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: கால்வாய் குறுக்கே அமைந்துள்ள, மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள கசிவு உடைப்பை ஏற்படுத்தி விடும் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்த அடிப்படையில், அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை மழைநீர் வடிகாலில் வெளியேறும் தண்ணீர் வெளியேறாத வகையில், குழாய் அமைத்து அடைக்கும் பணி தொடங்கப்பட்டது. இரவு 12 மணியளவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் நிலையில், நாளை (22ம் தேதி) காலை 6 மணிக்கு அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் சிறு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.