ADDED : அக் 20, 2026 01:56 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கதிரம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் பெரும்பள்ளம் ஓடையின் நடுவே உள்ள சூரம்பட்டி தடுப்பணைக்கு பிரதான நீர் வரத்தாக உள்ளது. கடந்த, 15ல் ஈரோட்டில் கொட்டிய கன மழையால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 2,450 ஏக்கர் பரப்பு பாசனம் பெறும். இது மட்டுமின்றி இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக
உயரும்.
வரும் நாட்களில் வட கிழக்கு பருவ மழை கொட்டும் என்பதை எதிர்பார்த்து வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
