/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடவுப்பணி துவங்குவதால் நீர் திறப்பு அதிகரிப்பு
/
நடவுப்பணி துவங்குவதால் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஜூன் 16, 2025 03:41 AM
கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களில், நெல் நடவுப்-பணி விரைவில் துவங்க உள்ளதால், இரு பாசனங்களுக்கும், நீர் திறப்பு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி---அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனங்கள் பெறுகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, மே.,26 முதல், வரும் செப்.,22ம்
தேதி வரை, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரு பாசனங்களிலும், ஏ.எஸ்.டி., 16, டி.பி.எஸ்., 5 என்ற ரக விதை நெல்லை, விவசாயிகள் நாற்றாங்காலில் விதைத்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் நடவுப்பணி துவங்க உள்ளது. அதனால் இரு பாசன வாய்க்காலிலும், நீர் திறப்பு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறையினர் கூறுகையில், 'இரு பாச-னங்களிலும், நெல் நடவுப்பணிக்காக விவசாயிகள் வயலை தயார்
செய்யவுள்ளனர்.
அதனால் இரு நாட்களாக, இரு வாய்க்காலிலும் நீர் திறப்பு அதி-கரித்துள்ளது. அதன்படி தடப்பள்ளி வாய்க்காலில், 668 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 240 கன அடி தண்ணீரும் நேற்று திறக்கப்பட்டது'
என்றனர்.--