ADDED : ஜூலை 22, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்துக்கு கடந்த ஜூன், 19ல் நீர் திறக்கப்பட்டது. 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக குறைக்கப்பட்டு, 100 கன அடியாக நேற்று முதல் குறைக்கப்பட்டது.
அதேசமயம் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 800 கன அடி நீர், குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்வரத்து, 3,641 கன அடியாக இருந்தது. நீர்மட்டம், 97.63 அடி; நீர் இருப்பு, 26.9 டி.எம்.சி.,யாக இருந்தது.