/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி பாசனத்திற்கு 1,000 கன அடியாக நீர் குறைப்பு
/
கீழ்பவானி பாசனத்திற்கு 1,000 கன அடியாக நீர் குறைப்பு
கீழ்பவானி பாசனத்திற்கு 1,000 கன அடியாக நீர் குறைப்பு
கீழ்பவானி பாசனத்திற்கு 1,000 கன அடியாக நீர் குறைப்பு
ADDED : அக் 16, 2025 01:52 AM
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பாசனத்திற்கு, 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலை பகுதிகளில், பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அணை நீர்மட்டம், 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக ஆக., 15 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கீழ்பவானி பாசனத்திற்கு நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில்,வினாடிக்கு, 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று, 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 5,267 கன அடியாக இருந்தது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம், 97.87 அடியாகவும், நீர் இருப்பு, 27 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.