/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி பலகாரம் தயாரிப்பு ஆவினில் கலெக்டர் ஆய்வு
/
தீபாவளி பலகாரம் தயாரிப்பு ஆவினில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 16, 2025 01:52 AM
ஈரோடு, ஈரோடு, சித்தோட்டில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். அங்கு தீபாவளி பண்டிகைக்காக, பசும்பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய், நெய், இனிப்பு வகைகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டார்.
ஆவின் பால்கோவா, 25 கிராம் - 15 ரூபாய், 100 கிராம் - 50 ரூபாய், 200 கிராம் - 100 ரூபாய், சர்க்கரை அல்லாத கோவா - 300 ரூபாய், பேரிட்சை கோவா - 250 கிராம் - 140 ரூபாய் என ஒவ்வொரு பலகாரங்களின் தயாரிப்பை ஆய்வு செய்தார். தீபாவளி சிறப்பு பண்டிகை விற்பனை, 2.09 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவின் பொது மேலாளர் அமிர்தலிங்கம், துணை பொது மேலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.