தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு
ADDED : ஜூன் 15, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு, கடந்த ஏப்.,27 முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு, 13ம் தேதி முதல், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களில், முறைநீர் பாசனம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேசமயம் தடப்பள்ளி வாய்க்காலில், நேற்று முன்தினம் வரை, 588 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 319 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தடப்பள்ளி வாய்க்காலில், 319 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 182 கன அடியாக நேற்று நீர் திறப்பு குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
