/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு

ADDED : டிச 12, 2024 01:55 AM
கோபி, டிச. 12-
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, இரண்டாம் போக சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூலை, 12 முதல், நவ.,8ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்நீரை கொண்டு இரு பாசனங்களிலும், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து அறுவடை செய்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டிச.,11 முதல், 2025 ஏப்.,9ம் தேதி வரை மொத்தம், 120 நாட்களுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, உதவி செயற்பொறியாளர் கல்பனா தலைமையில், நீர்வள ஆதாரத்துறையினர், இரு வாய்க்கால்களுக்கும் நேற்று காலை, 6:30 மணிக்கு தண்ணீர் திறந்தனர். தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு, 210 கன அடியும், அரக்கன்கோட்டை வாய்க்காலில், 104 கன அடியும் திறக்கப்பட்டது. இரு வாய்க்கால்களிலும், வரும் நாட்களில் நீர் திறப்பு அளவு, படிப்படியாக அதிகரிக்கப்படும் என, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.