/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர் நிலை பள்ளத்தில் கழிவை கொட்டிய பஞ்., நிர்வாகம் நீர்வளத்துறை அதிகாரி அதிர்ச்சி

ADDED : மே 18, 2025 05:47 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வெளி-யேறும் உபரி நீரும், ஏரி பாசனத்துக்கு மதகு வழியாக திறக்கப்-படும் தண்ணீரும், நல்லாகவுண்டன்கொட்டாய் பள்ளம் வழியாக கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது.
எண்ணமங்கலம் பஞ்சாயத்தில் பல்வேறு கிராமங்களில் சேகரிக்-கப்பட்ட, மக்காத பிளாஸ்டிக் குப்பை கழிவை, இந்த பள்ளத்தில் நேற்று கொட்டினனர். ஒரே நாளில் மூன்று டிராக்டர் குப்பை பள்-ளத்தில் கொட்டப்பட்டுள்ளது. இவை தண்ணீரில் அடித்து செல்-லப்பட்டு கெட்டிசமுத்திரம் ஏரியில் தேங்கி அசுத்தமாக்கும். இது-குறித்து ஏற்கனவே நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்தி-ருந்தும், பஞ்சாயத்து நிர்வாகம் உதாசீனப்படுத்தி, கழிவை கொட்-டிய கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.இதுகுறித்து அந்தியூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கிருபாகரன் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன், எண்ணமங்-கலம் பள்ளத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால், உபரி நீர் செல்ல முடியாமல் மதகுகளில் அடைத்து கொண்டது. அப்-போது பஞ்., தலைவர் உள்ளிட்டோரிடம் கழிவை கொட்டக்கூ-டாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்ச-ரித்தோம். தற்போது நல்லாகவுண்டன்கொட்டாய் பள்ளத்தில் கொட்டியுள்ளனர். பஞ்., நிர்வாகத்தின் மீது, கலெக்டர் மற்றும் அந்தியூர் பி.டி.ஓ.,வுக்கு புகார் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.