/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 189 போர்வெல் மூலம் சமாளிப்பு
/
காங்கேயத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 189 போர்வெல் மூலம் சமாளிப்பு
காங்கேயத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 189 போர்வெல் மூலம் சமாளிப்பு
காங்கேயத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 189 போர்வெல் மூலம் சமாளிப்பு
ADDED : ஏப் 27, 2024 07:04 AM
காங்கேயம் : காங்கேயம் நகராட்சியில், 18 வார்டுகளில், 15 ஆயிரம் குடும்பங்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு காவிரி மற்றும் அமராவதி ஆற்று நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தினசரி ஒரு நபருக்கு, 75 முதல் 90 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் காங்கேயம் நகராட்சிக்கு தினமும், 5.18 எம்.எல்.டி அளவு குடிநீர் வழங்க வேண்டும். தற்போது ஒரு நாளைக்கு, 3.50 முதல் 4 எம்.எல்.டி.,யே வழங்கப்படுகிறது. இதனால் ஒரு நபருக்கு தினசரி, 40 முதல் 55 லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. டிராக்டர் மற்றும் லாரிகளில் விற்கும் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை அனைவராலும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை.
இதனால் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, நகராட்சி சார்பில் போடப்பட்டுள்ள, 189 போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து அந்ததந்த வார்டு பகுதியில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கனிராஷ் கூறியதாவது: கடந்த நாட்களில் காவிரி குடிநீர் வரத்து குறைவாக இருந்தது, மின் தடை காரணம் என்கிறார்கள். தற்போது வெயில் என்பதால் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. மக்களுக்கு பூர்த்தி செய்ய நகராட்சியில் உள்ள, 189 போர்வெல் இயக்கப்பட்டு அந்தந்த பகுதிக்கு தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

