தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் பரிசோதனை அறிக்கை 12 கிராம மக்கள் எச்சரிக்கை

குடிநீர் பரிசோதனை அறிக்கை 12 கிராம மக்கள் எச்சரிக்கை

குடிநீர் பரிசோதனை அறிக்கை 12 கிராம மக்கள் எச்சரிக்கை


ADDED : செப் 26, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விபரம்:

பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவை சுற்றியுள்ள, 12 கிராம ஊராட்சிகளில் உள்ள நீர் ஆதாரங்களின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்த முழு விபரங்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஏற்கனவே சரிபார்த்து அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஜன., 26 மற்றும் மார்ச் 22ல் முகாசிபிடாரியூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், குடிநீர் பரிசோதனை அறிக்கையை கேட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். குடிநீர் வடிகால் வாரியத்திடம் அறிக்கை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். ஆக., 15 சுதந்திர தின கிராம

சபையிலும் தரப்படவில்லை. வரும் அக்.,2 காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டத்திற்குள் பரிசோதனை அறிக்கை கிடைக்காவிட்டால், சென்னிமலை வட்டார ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கப் போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே கிராம சபை கூட்டம் சுமூகமாக நடக்க, குடிநீர் தரப்பரிசோதனை அறிக்கையை உடனடியாக பெற்று வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us