தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாசனத்துக்கு நீர் திறப்பு; கலெக்டர் விளக்கம்

பாசனத்துக்கு நீர் திறப்பு; கலெக்டர் விளக்கம்

பாசனத்துக்கு நீர் திறப்பு; கலெக்டர் விளக்கம்


UPDATED : அக் 23, 2026 11:01 PM

ADDED : அக் 23, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 11:01 PM ADDED : அக் 23, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் இன்று (அக்.,23) நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

* கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலர் நல்லசாமி: கீழ்பவானி பாசனம் காக்கப்படும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் தனியார் மாட்டு சந்தைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

* தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி: கீழ்பவானி பாசனத்துக்கு உயிர் நீர், பாசன நீர் திறந்து பயிர், விவசாயிகளை காக்க வேண்டும்.

* தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி: கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் செல்லாத நிலையில் கிளை, கொப்பு வாய்க்காலில் துார்வார வேண்டும். மதகுகளை சீரமைக்க வேண்டும். பண்ணை குட்டை, கிணறுகளில் துார்வாரும்போது கிடைக்கும் மண்ணை, விவசாய பயன்பாட்டுக்கு எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

* காளிங்கராயன் பாசன சபை செயலர் கிருஷ்ணமூர்த்தி: ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு காயும் நிலையிலும், ஆலை இயக்கத்தை நிறுத்தியும், அறுவடை செய்யாமலும் வைத்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். கரும்பை வெட்ட, ஆலையை இயக்க நடவடிக்கை தேவை.

* பழங்குடியினர் மக்கள் நலச்சங்க மாநில தலைவர் குணசேகரன்: அம்மாபேட்டை, பூனாச்சி ஸ்பேக் ஸ்பிரிட் மற்றும் எத்தனால் ஆலை கழிவால், 10 கி.மீ., துார கிராமங்களில் நிலத்தடி நீர், காற்று மாசுபட்டு, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவில்லை. பல துறை கூட்டாய்வில் தவறு செய்தது உறுதியானதால், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

* கலெக்டர்: தென்கிழக்கு பருவமழையில், 270 மி.மீ.,க்கு, 121 மி.மீ., மட்டுமே மழை பதிவானது. வடகிழக்கு பருவமழையும் குறையும் என்கின்றனர். அதிகம் பெய்தால், நீர் வரத்து இருந்தால், பாசனங்களுக்கு தண்ணீர் விட முடியும். ஸ்பேக் ஆலை மின் இணைப்பை துண்டித்துள்ளோம்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நடக்கிறது. பாதிப்பு உறுதியாவதற்கு ஏற்ப நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாரி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், பதிவு செய்த கரும்பை வெட்டி, அரவைக்கு எடுக்க வேண்டும். அல்லது வேறு ஆலைக்கு வெட்டிக்கொள்ள என்.ஓ.சி., தர வேண்டும்.

தனியார் மாட்டு சந்தை கட்டண வசூல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us