/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் ஜன.,9ல் தண்ணீர் திறப்பு
/
கீழ்பவானி வாய்க்காலில் ஜன.,9ல் தண்ணீர் திறப்பு
ADDED : டிச 29, 2025 09:47 AM
ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் (எல்.பி.பி.,) இரண்டாம் போக பாசனத்துக்கு ஜன.,9ல் தண்ணீர் திறக்க இருப்பதாக நீர் ஆதார வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், முதல் போகத்தில், ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் ஜூலை, 31 முதல் டிச.,27 வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்-ளது.
இந்நிலையில் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள், நீர் வளத்துறை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக நிலக்கடலை, எள், சோளம் பயிரிடுவர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பவானி-சாகர் அணை நீர்மட்டம், 97.76 அடியாக உள்ளது. இது திருப்திகரமானதாக இருக்கிறது. எனவே கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். நீர் திறப்பு குறித்து அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
நீர் ஆதார வளத்துறை அலுவலர்கள் கூறியதா-வது: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கீழ்ப-வானி வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்-துக்கு உட்பட்ட, ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் ஜன.,9 முதல் முறை வைத்து நீர் திறக்கப்பட உள்ளது. மொத்தம், 67 நாட்களுக்கு நீர் வினியோகிக்கப்படும். இவ்வாறு கூறினர்.

