/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நள்ளிரவில் டூவீலரில் மணல் கடத்திய மூன்று பேர் கைது
/
நள்ளிரவில் டூவீலரில் மணல் கடத்திய மூன்று பேர் கைது
நள்ளிரவில் டூவீலரில் மணல் கடத்திய மூன்று பேர் கைது
நள்ளிரவில் டூவீலரில் மணல் கடத்திய மூன்று பேர் கைது
ADDED : டிச 29, 2025 09:47 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே நள்ளிரவில், டூவீலரில் மணல் கடத்திய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் பெரும்பள்ளம் அணை பகுதியில் இருந்து மணல் கடத்துவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு பங்களாபுதுார் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். பெரும்பள்ளம் அணை அருகே மூன்று பேர் டூவீலர்களில் மூட்டைக-ளுடன் வந்தனர். மூவரையும் நிறுத்தி சோதனை செய்ததில், கே.என்.பாளையம் ஐயப்பன், 46; சம்-பத்குமார், 48; ரங்கநாதன், 48, என தெரிந்தது. சாக்கில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. மூவரின் டூவீலர்கள், 12 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.