/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : டிச 06, 2024 07:44 AM
ஈரோடு: ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டு, சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது.
ஈரோடு மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளத்தில் இருந்து, சின்ன சேமூர், பெரிய சேமூர், எல்லப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் வகையில் குடிநீர் குழாய் போடப்பட்டுள்ளது.
கனிராவுத்தர் குளத்தில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால், சின்ன சேமூர், பெரிய சேமூர், எல்லப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, குடிநீர் முறையாக வினியோகம் செய்யமுடியவில்லை. மாநகராட்சி நிர்வாகம், குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து, குடிநீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.