/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எங்களுக்கு போடுவது ஓட்டல்ல; கொடிய ஆட்சிக்கு வேட்டு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் சரவெடி பேச்சு

ADDED : ஜன 27, 2025 02:19 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சு-மியை ஆதரித்து, ஈரோட்டில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ஈரோடு மக்களின் மதிப்பு ஆயிரம், ஐநுாறு ரூபாய் தானா? எதிர்த்து நிற்பது ஏற்க-னவே ஆட்சி செய்தவர்கள். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள். கோடி கோடியாக கொட்டி வேலை செய்பவர்கள்.
அவர்களிடம் பணத்தை தவிர ஒன்றுமில்லை. மக்கள் எங்களை கைவிட மாட்-டார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்கிறோம். சீமானை சிறையில் அடைத்தால் பயந்து விடுவார் என நினைத்தார்கள். 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் துணிவு, தெளிவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே உள்ளது. கருணாநிதி, ஸ்டாலினை, உதயநிதியை நம்பிய நீங்கள், இந்த ஒரே ஒரு முறை மட்டும் எங்-களை நம்புங்கள். எங்களுக்கு போடுவது ஓட்டு என நினைக்கா-தீர்கள். கொடிய ஆட்சிக்கு வைக்கும் வேட்டாக நினையுங்கள்.குடிக்கிற மக்கள் கொடுக்கிற காசில் நடப்பது அரசல்ல குடி
அரசு. பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்குங்கள். மாற்றம் தானாக வரும். இவ்வாறு சீமான் பேசினார். கூட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டத்தில் ஈ.வெ.ரா., குறித்து சீமான் எதுவும் பேசவில்லை.