/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரதி, காந்தியை நாம் பாதுகாக்க தவறி விட்டோம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆதங்கம்
/
பாரதி, காந்தியை நாம் பாதுகாக்க தவறி விட்டோம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆதங்கம்
பாரதி, காந்தியை நாம் பாதுகாக்க தவறி விட்டோம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆதங்கம்
பாரதி, காந்தியை நாம் பாதுகாக்க தவறி விட்டோம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆதங்கம்
ADDED : டிச 12, 2024 01:54 AM
ஈரோடு, டிச. 12-
''பாரதி, காந்தியை நாம் பாதுகாக்க தவறி விட்டோம்,'' என, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஈரோட்டில் பேசினார்.
ஈரோட்டில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த பாரதி விழாவுக்கு, தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் மயிலானந்தன் தலைமை வகித்தார். பவானி நதி பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் சத்தியசுந்தரி, பாரதி ஜோதியை ஏற்றி வைத்து அணிவகுப்பை துவக்கி வைத்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், அறிமுக உரையாற்றினார். குன்றக்குடி அடிகளார் உருவப்படத்தை, எழுத்தாளர் பொன்னீலன் திறந்து வைத்தார்.
கிருங்கை சேதுபதிக்கு, பாரதி விருது வழங்கி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: பாரதியார் தனது கடைசி உரையை ஆற்றி, கருங்கல்பாளையம் நுாலகம் அமைந்த ஈரோட்டில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். உறவுகள், நண்பர்கள் கைவிட்டாலும், புத்தகங்கள் உங்களை ஒரு போதும்
கைவிடாது. வாசிப்பே, உங்கள் சுவாசிப்பாக இருக்க வேண்டும். கம்பு சுற்றி விளையாடும் பருவத்தில், பாரதி எழுத்தை, படிப்பை சுற்றி வந்தார். ஒரு முறை காசிக்கு பாரதி சென்ற
போது, அங்கு ஆபத்தான சூழல் நிலவுவதாக அறிந்த செல்லம்மாள், பாரதிக்கு கடிதம் எழுதினார். காசியில் ஆபத்தான நிலை நிலவுவதால் பயமாக, கவலையாக உள்ளதாகவும், வீட்டுக்கு திரும்பும்படி எழுதி இருந்தார். இதை படித்த பாரதி, 'தமிழைப்படி; கவலை மறப்பாய்' என எழுதி இருந்தார்.
சென்னையில் காந்தியை சந்தித்த பாரதி, 'அன்று திருவல்லிகேணியில் தான் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு தலைமை தாங்கும்படி' கேட்டு கொண்டார். 'தன்னால் வர இயலாது' என காந்தி கூறிய அடுத்த வினாடி, 'பரவாயில்லை; இன்று நடக்கும் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். நான் தலைமை தாங்கிப்பேன்' எனக்கூறி, பாரதி சென்றுவிட்டார். இவர் யார் என கேட்ட காந்தி, 'அவரை பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள்' என்றார். நாம் காந்தியையும், பாரதியையும் பாதுகாக்க தவறிவிட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
கிருங்கை சேதுபதி ஏற்புரையாற்றினார்.

