/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பன்னீர் என்ற விஷப்பாம்பால் தோற்றோம்: முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆவேசம்
/
பன்னீர் என்ற விஷப்பாம்பால் தோற்றோம்: முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆவேசம்
பன்னீர் என்ற விஷப்பாம்பால் தோற்றோம்: முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆவேசம்
பன்னீர் என்ற விஷப்பாம்பால் தோற்றோம்: முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆவேசம்
ADDED : ஜன 28, 2024 03:34 PM
பவானி : ''கடந்த சட்டசபை தேர்தலில் பன்னீர் என்ற விஷப்பாம்பால் தோற்று போனோம்.
தற்போது அந்த விஷப் பாம்பை ஒழித்து விட்டோம்,'' என முன்னாள் அமைச்சர் கருப்பணன் பேசினார்.பவானி அடுத்த ஒலகடம் காந்திசிலை எம்.ஜி.ஆரின், 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், பவானி எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் பேசியதாவது:கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை விட, 1.50 லட்சம் ஓட்டுகள் மட்டுமே தி.மு.க.,வினர் அதிகம் பெற்றுள்ளனர். மொத்தம், 45 தொகுதிகளில், 1.50 லட்சம் ஓட்டுகளை இழந்துள்ளோம், 200 முதல், 4,000 ஓட்டுகள் வரை இந்த தொகுதிகளில் குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளோம்.அந்த, 1.50 லட்சம் ஓட்டுகள் பெற்றிருந்தால், அ.தி.மு.க., தான் ஆட்சியை பிடித்திருக்கும். ஏழு கட்சி கூட்டணியால், தி.மு.க., வினர் வெற்றி பெற்றனர். மூன்று கட்சியோடு கூட்டணி வைத்து, 1.50 லட்சம் ஓட்டுக்களில் தோற்றோம். அந்தத் தோல்வி எப்படி என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது. பன்னீர் என்ற நாக பாம்பால்தான் தோற்றுப்போனோம். விஷ பாம்பை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆண்டவனால் கொடுக்கப்பட்ட தண்டனை அது. தற்போது விஷ பாம்பை ஒழித்துவிட்டோம். இனி பிரச்சினை கிடையாது. அடுத்து பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. கண்டிப்பாக, 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு பேசினார்.