பவானிசாகர் அணையில் நீர் திறப்பு சம வாய்ப்பளித்தே திறந்தோம்; அதிகாரிகள் பதில்
பவானிசாகர் அணையில் நீர் திறப்பு சம வாய்ப்பளித்தே திறந்தோம்; அதிகாரிகள் பதில்
ADDED : நவ 27, 2026 06:45 AM
ஈரோடு:ஈரோட்டில் கலெக்டர் கந்தசாமி தலைமையில், டி.ஆர்.ஓ., ஜெயராமன் முன்னிலையில் வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு:
கீழ்பவானி
பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி: கீழ்பவானியில் நீர்
வளத்துறை விருப்பு, வெறுப்பு, ஆதாய அடிப்படையில் நீர் திறக்கிறது.
காவிரி இறுதி தீர்ப்பின்படி நீர் திறக்க வேண்டும். கோடையில் பிற
பாசனத்துக்கு தண்ணீர் விட்டது தவறு.
நீர் வளத்துறை பொறியாளர்கள்:
பவானிசாகர் அணையில் உள்ள நீரை 'காம்போன்டியம்' விதிப்படி சமமாக
வாய்ப்பளித்துள்ளோம். தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்துக்கு,
8.81 டி.எம்.,சி.,க்கு பதபில், 6.35 டி.எம்.சி.,யும், காளிங்கராயனில்,
உயிர் நீராக, 0.65 டி.எம்.சி.,க்கு பதில், 0.56 டி.எம்.சி.,யும் வழங்கி
உள்ளோம். காளிங்கராயனில் அடுத்த, 135 நாட்களுக்க, 5.81 டி.எம்.சி.,
வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானியில் உயிர் நீராக,
3.18 டி.எம்.சி., வழங்கி உள்ளோம். இன்னும், 12 டி.எம்.சி., நீர் இரண்டாம்
போக பாசனத்துக்கு முறை வைத்து வழங்கும்போது, சாகுபடியை
எடுக்கலாம்.
தமிழக விவசாயிகள் சங்கம் பெரியசாமி: கூட்டுறவு
பயிர் கடன் நிலுவை, பிற இனங்களை வரும், 30க்குள் செலுத்தினால், கடன்
தள்ளுபடி கிடைக்கும். அதற்காக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில்
கடன், வட்டி நிலுவையை செலுத்துகின்றனர். கடந்த சில நாளாக சர்வர்
பிரச்னையால், பணம் செலுத்த முடியவில்லை.
தமிழ்நாடு விவசாயிகள்
சங்க மாநில துணை தலைவர் துளசிமணி: நுகர்பொருள் வாணிக கழகம் நெல்
உள்ளிட்ட விளை பொருளை சிறப்பாக கொள்முதல் செய்யும் நிலையில், இந்த
துறையை கலைத்துவிட்டு, 'டான்பெட்' மூலம் கொள்முதல் செய்வதாக
செய்திகள் வருகிறது. அவ்வாறு கலைக்கக்கூடாது.
தமிழ்நாடு சிறு,
குறு விவசாயிகள் சங்கம் சுதந்திரராசு: கீழ்பவானியில் நீர் திருட்டை
தடுக்க நீர் வளத்துறை, போலீஸ், வருவாய் துறை, விவசாயிகள் கொண்ட குழு
அமைக்க வேண்டும். பாசன சபைக்கு தேர்தல் நடத்த வேண்டும்.
கூட்டுறவு
துணை பதிவாளர்: பயிர் கடன், வட்டி நிலுவை செலுத்துவதில் சர்வர் பிரச்னை
நேற்று முன்தினம் இரவு சரி செய்யப்பட்டு, வேகமாக பெறப்படுகிறது.
வரும் சனி, ஞாயிறு அன்றும் இரவு, 8:00 மணி வரை பெறப்படும். கடன், வட்டி
நிலுவை உள்ளோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி அழைக்கிறோம்.
நுகர்பொருள்
வாணிப கழக அதிகாரிகள்: நுகர்பொருள் வாணிப கழகத்தை கலைப்பதாக
செய்தி, தகவல் வருகிறது. அதுபோல அரசு உத்தரவு வரவில்லை. இவ்வாறு
விவாதம் நடந்தது.
