6 மாதம் அவகாசம் நீட்டிப்பு 'கன்டிஷன் பட்டா' பெற அழைப்பு
6 மாதம் அவகாசம் நீட்டிப்பு 'கன்டிஷன் பட்டா' பெற அழைப்பு
ADDED : நவ 27, 2026 06:46 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
இதில் டி.ஆர்.ஓ., ஜெயராமன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் பேசியதாவது:
மாவட்ட
அளவில் 'நத்தம் நிறுத்தம்', 'சர்க்கார் மனை நிறுத்தம்' போன்ற பெயரில்
உள்ள நிலங்களுக்கு, அந்த விதிகளை நீக்கி, பட்டா வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
அதுபோல, பவானிசாகர் அணை - கீழ்பவானி
வாய்க்கால் அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு, அப்பயன்பாடு
நீங்கலாக பிற நிலத்துக்கு 'கன்டிஷன் பட்டா' வழங்கப்பட்டுள்ளது.
அணை, வாய்க்கால் பயன்பாட்டுக்கு தேவை இல்லாத நிலங்களை, உரிய
பயனாளிகளிடம் வழங்க, உரியவர்கள் பெயரில் பட்டா வழங்கும்
நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, 60 சதவீதத்தை கடந்துள்ளது.
வகை
மாற்றத்துக்கான குறைந்த தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். இந்த
விபரங்கள் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகம், வி.ஏ.ஓ.,விடம் உள்ளது.
அவர்களிடம் விபரங்களை வழங்கி, ஆன்லைனில் சலானை பெற்று, தொகையை
செலுத்தி, பட்டா பெறலாம். ஒரு நபராக இருந்தால் உரிய தொகை செலுத்தினால்
போதும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் எனில், இணைந்து தொகை செலுத்தி
ஆவணங்களை வழங்கி பட்டா பெறலாம். இதற்கான ஆறு மாத காலம் முடிந்த
நிலையில், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கூறி, மேலும் ஆறு
மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
