/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டா நிலத்தில் மரம் நட்டு தருகிறோம்: வனத்துறை அழைப்பு
/
பட்டா நிலத்தில் மரம் நட்டு தருகிறோம்: வனத்துறை அழைப்பு
பட்டா நிலத்தில் மரம் நட்டு தருகிறோம்: வனத்துறை அழைப்பு
பட்டா நிலத்தில் மரம் நட்டு தருகிறோம்: வனத்துறை அழைப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:35 AM
சென்னிமலை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் பட்டா நிலத்தில் மரக்கன்று
கள் நடவு செய்ய விருப்பப்பட்டால், வனத்துறை நடவு செய்து தருகிறது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை,- அரச்சலுாரில் செயல்படும் வன விரிவாக்க மையம் சார்பில், விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரும் மரக்கன்றுகளை, வனத்துறை மூலமே நடவு செய்து தருகின்றனர். முறையாக பராமரிப்பு செய்தால் மட்டும் போதும். தற்போது தேக்கு, மகாகனி, செம்மரம், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரக்கன்றுகள் இருப்பு உள்ளது. மேலும், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள் மற்றும் பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படும்.
இதில் நாவல், நாட்டு வேம்பு, புளியன், புங்கன், நீர்மருது, வாகை, மகிழம், கொடுக்காப்புளி, ஆலம், பாதாம், வேங்கை ஆகிய மரக்கன்றுகள் இருப்பு உள்ளன. இதையும் வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் கார்டு, பட்டா சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தக ஜெராக்ஸ், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன், அரச்சலுார் வனவிரிவாக்க மைய வனவர் அழகிரிசாமியை, -99659 66807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.