/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிலுவை மானியம் கேட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
நிலுவை மானியம் கேட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 19, 2024 01:17 AM
நிலுவை மானியம் கேட்டு
நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக். 19-
ஈரோடு, பவானி சாலை, அசோகபுரத்தில் உள்ள கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் வ.சித்தையன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மு.வரதராஜன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானிய தொகையை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். கைத்தறி ரகங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானிய தொகைக்கான உச்சவரம்புகளை நீக்க வேண்டும். தீபாவளிக்கு, 10 நாட்களுக்கு முன்பாக அனைத்து நெசவாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவு கூலியை வங்கி மூலம்தான் வழங்கப்படும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும்.
கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை கடுமையாக அமலாக்க வேண்டும். கைத்தறி ரகங்களுக்கான ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிர்வாகிகள் ரணதிவேல், நாகப்பன், சரஸ்வதி, ராசம்மாள், பொன்னுசாமி, சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.