/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விதை உற்பத்தியை கண்காணிக்கும் இணைய தளம்
/
விதை உற்பத்தியை கண்காணிக்கும் இணைய தளம்
ADDED : ஜூலை 17, 2025 01:35 AM
ஈரோடு, மத்திய வேளாண் அமைச்சகம், உணவு உற்பத்தியை அதிகரிக்க, நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களில் விதை மாற்று சதவீத அடிப்படையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிர் ரகங்களில் தரமான சான்றளிப்பு பெற்ற விதைகளின் உற்பத்தி, வினியோகத்தை கண்காணிக்க, தனி இணைய தளம் 'SATHI' செயல்படுகிறது.
இந்த இணைய தளம் குறித்த பயிற்சி முகாம் ஈரோடு வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட விதை சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் சத்தியராஜ் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
பயிர் விளைச்சலை அதிகப்படுத்தி, அதிக லாபம் ஈட்டி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தரமான சான்றளிப்பு பெற்ற விதைகளின் பயன்பாடு முக்கியம். விதைச்சான்றளிப்பு துறை கண்காணித்து, சான்றட்டை பொருத்தி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் தரமான சான்றளிப்பு பெற்ற விதைகளானது, நல்ல முளைப்பு திறன், இனத்துாய்மை, புறத்துாய்மை, சரியான ஈரப்பதம்,
எடை கொண்டதாகும்.
இக்கண்காணிப்புக்கு 'SATHI' இணைய வழி பதிவு தளம் உறுதி செய்கிறது. விதைச்சான்றளிப்பு துறையின் பணிகளான விதைப்பு அறிக்கை பதிவு, வயலாய்வு, முத்திரையிடுதல், சுத்திப்பணி, மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறுதல், சான்றட்டை பொருத்தி தரமான விதைகளாக வினியோகம் செய்வது வரை இத்தளம் மூலம் கண்காணிக்கலாம். இப்பணிகள், மொபைல் மூலம் ஜி.பி.எஸ்., விபரங்களுடன் கூடிய புகைப்படங்கள் பதிவேற்றுவதால் தரம் மேம்படுகிறது.
இவ்வாறு பேசினார்.
பின், புதிய வலைதள நடைமுறை குறித்து அரசு விதை உற்பத்தியாளர்கள், விதை சான்றளிப்பு துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.