/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க.,வினருக்கு வலைத்தள பயிற்சி
/
தி.மு.க.,வினருக்கு வலைத்தள பயிற்சி
ADDED : நவ 11, 2024 07:30 AM
ஈரோடு: தி.மு.க., இளைஞரணியின் நான்கு, ஐந்தாம் மண்டலங்களுக்கான மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகளுக்கான, சமூக வலைத்தள பயிற்சி நேற்று நடந்தது. மாநில துணை செயலாளரான எம்.பி., பிரகாஷ் தலைமை வகித்தார்.
மாநில துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக லெனின், அன்பகம் விக்னேஷ் முன்னிலை வகித்து, சமூக வலைத்தளங்களில் எப்படி பணியாற்றுவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டு செல்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில், 61 சட்டசபை தொகுதிகளை சார்ந்த, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.