தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ களை கட்டிய கொடிவேரி

களை கட்டிய கொடிவேரி

களை கட்டிய கொடிவேரி


ADDED : ஆக 04, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 03:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி; ஆடிப்பெருக்கு பண்டிகையை ஒட்டி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் நேற்று காலை, 8:00 மணி முதலே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

வினாடிக்கு, 70 கன அடி மட்டுமே வெளியேறி-யதால், தடுப்பணை வழியாக தண்ணீர் அருவி-யாக கொட்டவில்லை. ஆனாலும் குறைந்த-ளவில் கொட்டிய நீரிலும், மணல் போக்கியில் இருந்து வெளியேறிய நீரிலும், பவானி ஆற்றில் குட்டையாக தேங்கி நின்ற தண்ணீரிலும் குளித்து சென்றனர்.

கடும் சுகாதாரக்கேடுஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், ஆடிப்-பெருக்கை கொண்டாட வந்த நிலையில், பவானி ஆற்றங்கரை பகுதியில் எங்கு பார்த்தாலும், பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகள், குழந்தை-களின் டயாபர் பரவலாக கிடந்தது. இதனால் தடுப்பணை வளாகத்தில் கடும் சுகாதாரக்கேடு நிலவியது. பவானி ஆற்றங்கரையின் புனிதம் காக்க, வரும் நாட்களில் நீர்வளத்துறை, சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us