தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அமராவதியில் ஆடிப்பெருக்கு

அமராவதியில் ஆடிப்பெருக்கு

அமராவதியில் ஆடிப்பெருக்கு


ADDED : ஆக 04, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்; ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தாராபுரம் அமராவதி ஆற்றங்கரைக்கு, வழக்கம்போல் மக்கள் நேற்று வந்தனர்.

மணலில் கன்னிமார் உருவங்களை செய்து, பொட்டு, பூ வைத்து, ஆரத்தி எடுத்து பூஜை செய்தனர். பின் அமராவதி நதியை வணங்கி, புது தாலி அணிந்தனர். தாரா-புரம் நாடார் தெருவில் இருந்து, 200க்கும் மேற்-பட்ட பெண்கள் மற்றும் குடும்பத்தினர், முளைப்-பாரிகளுடன் ஊர்வலமாக அமராவதி ஆற்றுக்கு சென்று பூஜை செய்தனர். அமராவதி ஆற்றில் நீர்-வரத்து குறைவாக இருந்ததால், முளைப்பாரி விடுவதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us