/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாரச்சந்தை குத்தகைதாரர் அடாவடி: கூடுதல் சுங்கம் வசூலிப்-பதாக புகார்

ADDED : ஜன 07, 2026 06:23 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில், தமிழக விவ-சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு வழங்கி கூறியதாவது:
தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக புன்செய் புளி-யம்பட்டி வாரச்சந்தை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதி விவ-சாயிகள் விளைபொருட்களை விற்த கொண்டு வருகின்றனர். வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்துள்ள சுரேஷ், எந்த பொருட்களுக்கு எவ்வளவு சுங்க கட்டணம் என்ற பட்டியலை பார்வைக்கு வைக்காமல், வாய்க்கு வந்தபடி அதிக சுங்கம் கேட்டு விவசாயிகளை மிரட்டுகிறார்.
கடந்த டிச., 4ல் ஒரு விவசாயி கீரை கொண்டு வந்தபோது, சுரேஷ் அதிக சுங்கம் கேட்டுள்ளார். விவசாயி கொடுக்க மறுத்-ததால் அவரை மார்க்கெட் உள்ளே வைத்து பூட்டியுள்ளார். அரா-ஜக செயலில் ஈடுபட்ட சுரேஷின் குத்தகை உரிமத்தை ரத்து செய்து, மறு ஏலம் விட வேண்டும். இவ்வாறு கூறினர்.
நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் இல்லாததால், நகராட்சி மேலாளரிடம் மனு வழங்கப்பட்டது என்று, விவசாயிகள் தெரிவித்தனர்.