ADDED : ஆக 25, 2025 02:42 AM
காங்கேயம்: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பயனாளிக-ளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, வீரசோழபுரம் யானைமேல் அழகிய அம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
வருவாய்த்துறை சார்பில், 79 பயனாளிகளுக்கு, 41.17 லட்சம் ரூபாய் மதிப்பில் (நத்தம்) இலவச வீட்டுமனை பட்டா; 29 பய-னாளிகளுக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் (ஆதிதிராவிடர் நத்தம்) இலவச வீட்டுமனைப் பட்டா; 153 பயனாளிகளுக்கு (ஆதி திராவிடர் நத்தம்) இ-பட்டா; நத்தம் துாய சிட்டா, 66 பேருக்கு; 16 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை; ஊரக வளர்ச்-சித்துறை சார்பில், தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கலைஞர் கனவு இல்லத் திட்ட ஆணைகளை, 65 பயனாளிக-ளுக்கும் வழங்கினார். மொத்தம், 425 பயனாளிகளுக்கு, 3.19 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. வெள்ளக்கோவில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன், காங்கேயம் தாசில்தார் மோகனன், இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

