/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜூன் 14, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மக்களுடன்
முதல்வர் திட்ட முகாம் நேற்றும் நடந்தது.
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட புங்கம்பாடி, வடமுகம் வெள்ளோடு, கொம்மக்கோவில், எலவமலை, மேட்டு நாசுவம்பாளையம், பேரோடு பஞ்.,களில் முகாம் நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில் கன்று வளர்ப்பு கடன், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டு வரி பெயர் மாற்றம், மகளிர் குழு கடன், தொழில் கடன் என, 45 பயனாளிகளுக்கு, 15.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.