ADDED : நவ 14, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தில் துாய்மை பணியாளர்களுக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் முஸ்தபா வரவேற்றார்.
துாய்மை பணியாளர்களுக்கு கடனுதவி, குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி திட்டம் குறித்து, தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜுன் விளக்கினார். நிகழ்ச்சியில், மூலனுார் துாய்மை பணியாளர், 27 பேருக்கு, தாட்கோ நிறுவனம் சார்பில், 15 லட்சம் ரூபாய் கடனுதவி மற்றும் ஐந்து பேருக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.
துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, துாய்மை பணியாளர் பங்கேற்றனர்.

