/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது
/
லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது
ADDED : நவ 13, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, மொடச்சூர் அருகே கே.ஏ.எஸ்., நகரைச் சேர்ந்த ஜெயா, 45, தன் தாய் வகையறாவுக்கு உண்டான சொத்தில், தன் தாய் உள்ளிட்டோர் பெயரை பட்டாவில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
கோபி தாலுகா மண்டல துணை தாசில்தார் மணிமேகலை, 43, என்பவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத ஜெயா, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
துணை தாசில்தார் சொன்னபடி, லஞ்ச பணத்தை கலிங்கியம் 'ஆ' கிராமம் வி.ஏ.ஓ., சசிக்குமார், 33, அலுவலகத்தில் வைத்து கொடுத்த போது, நேற்று மாலை போலீசார் அவரை கைது செய்தனர்.
இதற்கு உடந்தையான மணிமேகலையும் கைது செய்யப்பட்டார்.

