/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13
/
ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13
ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13
ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13
ADDED : நவ 13, 2025 01:22 AM
ஈரோடு, தலைமை தபால் அலுவலகம் முன், மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு, ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில், செயலர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோட்ட செயலர் கோபிநாத், நிர்வாகிகள் சின்னசாமி, மணியன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
மத்திய அரசின், 8வது ஊதிய உயர்வு குழுவில் உள்ள ஊழியர் விரோத செயல்பாட்டை நீக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, அடிப்படை சம்பளம் மற்றும் அடிப்படை பென்ஷனில், 30 சதவீதம் என, 2026 ஜன., 1 முதல் வழங்க வேண்டும். 50 சதவீத டீ.ஏ., டி.ஆர்., மெர்ஜர், 2024 ஜன., 1 முதல் வழங்க வேண்டும். சம்பளத்துடன் பென்ஷனிலும் உயர்வை வரும் ஜன., 1 முதல் வழங்க வேண்டும். அதற்கேற்ப ஊதியக்குழுவின் பரிசீலனை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும். ஊதியக்குழுவில் பென்ஷன் மறுக்கும் நிதிச்சட்டம், 2025ஐ ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.