/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1,131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
1,131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஆக 20, 2025 01:20 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வெள்ளகோவிலில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் மற்றும் மேம்பாட்டுதுறை மகளிர் திட்டம் வேளாண்மை துறை உள்ளிட்ட திட்டங்களில் இருந்து, 1,131 பயனாளிகளுக்கு, ஒரு கோடியே, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி, மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், நகரச் செயலாளர் சபரி முருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.